வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்த பிறகு, அந்தக் கூட்டணியின் நிழலில்கூட நாங்கள் ஒதுங்கமாட்டோம் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்த பிறகு, அந்தக் கூட்டணியின் நிழலில்கூட நாங்கள் ஒதுங்கமாட்டோம் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி;- மோடி அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாயிகளைப் புறக்கணித்த, துரோகம் செய்த எந்த அரசும் வளர்ந்ததாக வரலாறு இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்த பிறகு, அந்தக் கூட்டணியின் நிழலில்கூட நாங்கள் ஒதுங்கமாட்டோம்.
திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் பாதுகாக்க வேண்டும். திமுக அல்லது அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டும். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம், திராவிடக் கட்சிகள் ஆண்டால்தான் சிறப்பாக இருக்கும். மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும். இந்தத் தேர்தலில் அதிமுகவைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து, அடுத்த தேர்தலில் அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் கணக்கு.
சிவசேனவைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல், பீகாரில் நிதிஷ்குமார் கட்சியைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல் தமிழகத்தில் அதிமுகவை அடுத்த தேர்தலில் பலகீனபடுத்திவிட்டு, அதைத் தாண்டி பா.ஜ.க. வரவேண்டும் என நினைக்கிறார்கள். இது வடஇந்தியா அல்ல, இது தமிழ்நாடு. பாஜக தமிழக தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும்.
இந்தியா முழுவதும் வாக்கு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தி தில்லு முல்லு செய்து வருகிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதையும் மீறி பாஜகவிற்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அதிமுகவில் யாருடைய பேச்சைக் கேட்கிறார்கள் என்றால் கே.பி.முனுசாமி பேச்சைத்தான் கேட்கிறார்கள். அவர்தான் திராவிட இயக்கத்தின் பார்வையோடு விமர்சனம் வைக்கிறார் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 6:18 PM IST