Asianet News TamilAsianet News Tamil

ஆர்கே நகரில் ஏன் போட்டியிடவில்லை... கங்கை அமரன் விளக்கம்...

bjp partyman gangai amaran explains why he was not in rk nagar election field
bjp partyman gangai amaran explains why he was not in rk nagar election field
Author
First Published Dec 16, 2017, 12:30 PM IST


தான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து, பாஜக.,வைச் சேர்ந்த கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். 

உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இசையமைப்பாளரும் பாஜக., பிரமுகருமான கங்கை அமரன். தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால்தான், தன்னால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட இயலவில்லை என கங்கை அமரன் தெரிவித்தார். 

முன்னதாக, கங்கை அமரன் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்க விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாயின. தேவையில்லாமல் ஏன் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் கருதியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக., தமிழகத் தலைவர்  தமிழிசை சௌந்தர்ராஜன்,  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கரு.நாகராஜன் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து கூறினார். பின்னர், ஆர்கே நகரில் போட்டியிடாதது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதற்கான காரணத்தை விளக்கினார். 

கடந்த முறை பாஜக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தல் ரத்தானது. சென்ற முறை போட்டியிட்ட வேட்பாளர்களே பெரும்பாலும் அந்த அந்தக் கட்சிகளின்  சார்பில் களத்தில் நிற்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios