BJP nominee for election arkenakar Amaran Ganges - NEWS FAST said the same day ... !!!
ஆர்.கே.நகரின் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தேர்வு செய்யபட்டுள்ளதாக பா.ஜ.க தேர்வு குழு செயலாளர் ஜே.பி.நாட்டா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. அதன்பின்பு ஜெயலலிதா மறைவு, சசிகலா தேர்வு, ஒ.பி.எஸ் பிரிவு, சொத்துவிப்பு வழக்கு தண்டனை, எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி, எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கபடுவது, நம்பிக்கை தீர்மானம், ஜெயலலிதா மறைவில் சந்தேகம் என தமிழகம் ஒரே பரபரப்புடனே காணப்பட்டது.
நீண்ட நாட்கள் கழிந்த பிறகு ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைதேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் மீண்டும் பரபரப்புக்கு அடிக்கோல் நாட்டியது.
தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.
அதன்படி அதிமுகவின் சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒ.பி.எஸ் தரப்பில், ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தனான மதுசூதனன் தேர்வாகி உள்ளார்.
தீபா சார்பில் அவரே நிற்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
திமுக சார்பில் ஆர்.கே.நகர் வேட்பாளராக மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டு கூட்டணிகளை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறார்.
தேமுதிக சார்பில் மதிவாணன் தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனுதாக்கல் செய்வதில் முந்திகொண்டுள்ளார்.
அதன் வரிசையில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தேர்வு செய்யபட்டுள்ளார்.
இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக தேர்வு குழு செயலாளர் ஜே.பி.நாட்டா வெளியிட்டார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக இறங்க கங்கை அமரன், நடிகர் விஜயகுமார், காயத்ரி ரகுராம், கவுதமி பெயர்கள் அடிபட்டு வந்தது.
ஆனால் கங்கை அமர்ந்தான் தேர்வு செய்யபடுவார் என மூன்று நாட்களுக்கு முன்பே NEWS FAST செய்தி வெளியிட்டு இருந்தது.
அதுபோலவே தற்போது கங்கை அமரனே தேர்வாகி உள்ளார்.
அதன் லிங்க் இதோ......
http://www.newsfast.in/news/gangai-amaran-nominate-in-rk-nagar
