பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு, அவருக்கு பாஜகவினர் புகலிடம் கொடுப்பார்களா என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பூ தமது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாம், மிசோரம் தொடங்கிய போராட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கலவரமாக வெடித்துள்ளது. இந்த போராட்டங்களில் மாணவர்களும் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்ற வாதங்கள் அனைத்தும் அரசியல் காரணத்திற்காக பரப்பப்படும் பொய் பிரச்சாரம் என்று கூறியிருந்தார். மேலும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.  

இந்நிலையில், எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நடிகரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு கடுமையாக டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில்,  எச்சு ராஜா உண்மையிலேயே பைத்தியம்... மற்ற யாரும் அவர் பேசுவது வழியில் பேசமாட்டார்கள்... பாஜகவில் இருந்து ஒருவர் வந்து அவரை புகலிடத்துக்கு கொண்டு செல்கிறா என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டர் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

 

இதற்கு, நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ’கூ’ குஷ்பு நீங்கள் மற்றவர்களை பேர் சொல்லி அழைக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் மற்ற பொய்களில் இருந்து வெளிவரப்போகிறீர்கள். உங்கள் பொய்களை நான் பட்டியல் இடட்டுமா. இந்துகளை வெறுக்கிறீகள். பொய்யர்களான உங்களுக்கும் காங்கிரஸுக்கும் புகலிடம் இல்லை என பதிவிட்டுள்ளார்.