Asianet News TamilAsianet News Tamil

தலித் இளைஞருடன் ஓடிப்போன பாஜக எம்எல்ஏ மகள் ! வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த மணமகள் !!

உத்தர பிரதேச மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவரின் மகள் தான் காதலித்த தலித் இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டுள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

BJP mla daughter married dalith boy
Author
Uttar Pradesh, First Published Jul 12, 2019, 5:35 PM IST

சாதிய கொடுமைகளும், படுகொலைகளும் இந்தியாவின் பல பகுதிகளில் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.  அதுவும் உத்தரபிரதேச மாநிலத்தில் இது போன்ற கொடுமைகள் ஏராளமானவை அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் அங்குள்ள பரிலி செயின்பூர் பகுதியின் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. பிராமண சமுதாயத்தை சேர்ந்த இவர் தொடக்க காலம் முதலே பாஜகவில் அடிப்படை உறுப்பினராய் இருந்து எம்.எல்.ஏவாக உயர்ந்துள்ளார். இவரது மகள் சாக்ஷி. இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.

BJP mla daughter married dalith boy
இந்நிலையில் சாக்ஷி  அவருடன் கல்லூரியில் படித்து வந்த அஜிஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அஜிஸ் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இருவரின் திருமணத்துக்கும் தன் அப்பா ராஜேஷ் மிஸ்ரா சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை உணர்ந்த சாக்ஷி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் அஜிதீஸுடன் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் தனது அப்பாவால் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று நினைத்த சாக்ஷி , எனது அப்பாவுக்கு தெரியாமல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எனது அப்பாவால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வீடியோ ஒன்றையும்  வெளியிட்டார். 

BJP mla daughter married dalith boy

இந்த வீடியோவால் அதிர்ச்சி அடைந்த  சாக்ஷியின் தநதை . நான் காதலுக்கு எதிரானவன் இல்லை. என் மகள் காதலை சேர்த்து வைப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த பையனுக்கு எனது மகளை விட வயது ரொம்ப அதிகம். மேலும் அவனுக்கு வேலை எதுவுல் இல்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

BJP mla daughter married dalith boy

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காதல் தம்பதியினர் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios