வரவிருக்கும் 2019  பாராளுமன்றத் தேர்தலில்  திமுக வுடன் பிஜேபி, கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 30 முதல், 37 தொகுதி கள் வரை வெற்றி பெறலாம்  அதாவது, லோக்சபா தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்கு  சதவீதத்தில், ஆளுங்கட்சி என்ற அடிப்படையில், அதிமுகவுக்கு 25 சதவீதம் வாக்கும்; தினகரன் கட்சிக்கு, 10 சதவீதம் வாக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தி.மு.க., - பிஜேபி கூட்டணிக்கு, 40 சதவீதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என மத்திய உளவுத் துறை  ரிப்போர்ட் கொடுத்துள்ளது.   

இந்த சூழலில் தான் திமுக தலைவர் உடல் நிலை சீரியசான கண்டிஷனில் காவேரியில் அனுமதிக்கபட்டார்.  அப்போது கருணாநிதிக்கு  உடல்நலம் பெற தேவையான உதவிகளை  செய்ய தயாராக இருக்கிறோம் என மோடியும் டிவிட்டரில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து  கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி , துணை ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன்,  பிஜேபி தலைவர்கள் என வரிசையாக காவேரிக்கு வந்தனர். இதனையடுத்து  'கருணாநிதி மறைந்ததும்  தேசிய துக்கமாக, மத்திய அரசு அறிவித்தது. லோக்சபா,ராஜ்யசபாவில், இரங்கல் தெரிவித்து, இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இப்படி திமுகவிற்கு  ஆதரவாகவே இருந்து வந்தது. அதேபோல,  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி தனது சகாக்களோடு  டெல்லிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். 

இந்நிலையில், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 30 முதல், 37 தொகுதி கள் வரை வெற்றி பெறலாம் என, மத்திய உளவுத் துறை கணித்துள்ளது.  தமிழகத்தில், திமுக வுடன், பிஜேபி கூட்டணி அமைத்தால், தேசிய அளவில், மாநில கட்சிகளின் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கும். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் - கருணாநிதி ஏற்படுத்திய கூட்டணியைப் போல ஒரு பெரிய வெற்றி கிடைக்கும் என பாஜக நம்புகிறது. அப்படி ஒரு கூட்டணி உருவானால் மற்ற மாநிலங்களிலும் உள்ள கட்சிகளும், பிஜேபியுடன் கூட்டணி அமைக்க தயாராகும் என, பிஜேபி, பெரிதும் நம்புகிறது.  இதனால் திமுக வோடு கூட்டணி சேர முயன்று வருகிறது பிஜேபி. ஆனால் திமுக  தரப்பிலிருந்து, இன்னும் எந்த ரியாக்ஷனும் இல்லாததால்.   திமுக தலைவரால் வெளியேற்றப்பட்ட முன்னாள்  மத்திய அமைச்சர் அழகிரியை,  பயன்படுத்தி, திமுக.,விற்கு  குடைச்சல் கொடுக்க ப்ளான் போட்டு வருகிறார்களாம்.

இதற்கு முன்னதாக வரும், 30ம் தேதி, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கவுள்ள கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில்,அமித்ஷா பங்கேற்றால், திமுக  தொண்டர்கள் மத்தியில்  பிஜேபி மீது  இருக்கும்  மரியாதை வரும் அதாலால் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறாராம் அமித்ஷா. 

ஆனால் திமுக தொண்டர்களோ, திராவிட கட்சிகளில் உருவாகும் பலவீனத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் வலுவாக காலுான்ற பார்க்கிறது. வாஜ்பாயை ஒரே ஒரு ஒட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கவிழ்தத்தால் பழைய பகையை மனதில் வைத்து, ஜெயலலிதாவின் மறைவிற்க்குப்பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ்,  தினகரன் என கட்சியை பிரித்துவிட்டு கேம் ஆட்டத்தை வேடிக்கை பார்த்து வருகிறது பிஜேபி.  இதனால்  பிஜேபிக்கு எந்த  பயனும் இல்லை வாக்குகள் சிதறியுள்ளது யாரோடு கூட்டணி வைத்தாலும் ஜெயிப்பது கஷ்டம் எனவே இப்போது இருப்பது, திமுக மட்டுமே.

எனவே, திமுகவோடு கூட்டணி சேர முயற்சித்து வருகிறது பிஜேபி மேலிடம் ஆனால் ஸ்டாலினோ பிஜேபியுடன் கூட்டணி போனால் திமுக வுக்கு எதிர்காலம் இருக்காது என்பது மட்டுமின்றி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்றபயம் இருப்பதால்,  கூட்டணி பற்றி எந்த பதிலும் சொல்லாமல் குழப்பத்தில் இருக்கிராராம். ஒரு வேலை கடைசி வரை கூட்டணிக்கு ஒகே சொல்ல வில்லை என்றால், காட்டவில்லை என்றால், அழகிரியை  வைத்து அடுத்த கேம் ப்ளே பண்ண தயாராகி வருகிறதாம் பிஜேபி.