Asianet News TamilAsianet News Tamil

தோல்வி முகத்தில் பாஜக? ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் காங்கிரஸ் முன்னிலை !!

பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் அந்த கட்சி மண்ணைக் கவ்வும் நிலை உருவாகியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

bjp loss 3 states
Author
Bhopal, First Published Dec 11, 2018, 9:45 AM IST

அடுத்த ஆண்டு  நடக்க இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரம், வடஇந்திய மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய இந்தியாவான மத்தியப் பிரதேசம், தென்னிந்திய மாநிலமான தெலங்கானா என்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பதால் இது ஒட்டுமொத்த இந்தியாவின் தேர்தல் முடிவாக எதிர் நோக்கப்படுகிறது.

bjp loss 3 states

சத்தீஸ்கர் , மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என 5 மாநிலங்களிலும் இன்று வாக்குகஙள எண்ணப்பட்டு வருகின்றன.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும்  பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 84 இடங்களிலும், பாஜக 71 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தைப் பொறுத்த வரை காங்கிரஸ் 77 இடங்களிலும், பாஜக 60 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

சத்தீஷ்கரில் காங்கிரஸ் 42 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலம் முன்னிலை பெறறுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தோல்வி முகத்துடன் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios