முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு..! என்ன காரணம் தெரியுமா.?
சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்தனர்.
முதலமைச்சரை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை முதலமைச்சரரிடம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், நெல்லையப்பர் கோவிலுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் அமைத்து தர வேண்டும், தேர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதேபோல மொடக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி தமது தொகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவர மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தமிழக அரசு இடமளிக்க ஒப்புதல் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு மத்திய அரசு மீது பழி போடும் திமுக..! இறங்கி அடிக்கும் குஷ்பு
கோரிக்கை மனு கொடுத்த எம்எல்ஏக்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதக் கலவரங்களை தடுக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் இனி ஒரு வழிபாட்டு தளம் இருக்கிறது என்று சொன்னால் அடுத்த மதத்திற்கான வழிபாட்டு தளம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறினார். அதேபோல அரசு நிலங்கள் மற்றும் அறநிலைக்கு துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். முதலமைச்சர் அனைத்து விஷயங்களையும் கவனமாக கேட்டுக்கொண்டார் நிச்சயம் இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படியுங்கள்