மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளரின் திடுக்கிடும் வாக்குமூலத்திற்குப் பிறகு, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பிரேத பரிசோதனைக் குழுவை விசாரிக்க வேண்டும் என்று புயலை கிளப்பியிருக்கிறார்.

 ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா குடியிருப்பில் சுஷாந்த் இறந்து கிடந்தார். 34 வயதான நடிகரின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்கதையாகவே போய்கொண்டிருக்கிறது. பீகார் போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியதில் இருந்து பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.சுதஷாந்த் காதலி ரியா மீது பல்வேறு கோணங்களில் விசாரணை போய் கொண்டிருக்கிறது. சுஷாந்திடம்இருந்து தங்கம் பணம் கொள்ளையடிப்பதற்காகவே இதுபோன்று நடந்ததா? இல்லை எங்கே சினிமாதுறையில் இளம் வயதில்இமயத்தை தொட்டுவிடுவானோ? என்கிற போட்டியில் ரியாவை பயன்படுத்தி சுஷாந்த் கொலைசெய்யப்பட்டாரா? என்கிற கோணத்திலும் வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறதாம்.

" ஆம்புலன்ஸ் உதவியாளர், சுஷாந்தின் உடல் மஞ்சள் நிறமாகிவிட்டதாகவும், அவரது காலில் சில அடையாளங்கள் இருந்ததாகவும், அவரது இரண்டு கால்களும் வளைந்திருந்ததாகவும் ஆம்புலன்ஸ் டிரைவர் சாட்சியம் முக்கியமானது". என்று சுப்பிரமணிய சாமி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

“பிரேத பரிசோதனை செய்த ஐந்து மருத்துவர்கள் டாக்டர் ஆர்.சி. கூப்பர் முன்சிபல் மருத்துவமனையை சிபிஐ சோதனை செய்வது நல்லது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கூற்றுப்படி, அவரின் கால்கள் அவரது கணுக்கால் கீழே முறுக்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்த மர்ம முடிச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து வருகிறது என்கிறார் சுப்பிரமணிசுவாமி. 

இதற்கிடையே பீகாரில் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து சுஷாந்த் தற்கொலை ஊடகங்களால் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.