Asianet News TamilAsianet News Tamil

போலீஸ்காரரை பளாரென கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்... மன்னிப்பு கேட்க மாட்டேன் எனத் தெனாவெட்டு..!

அந்த போலீஸ்காரர் சாதாரண உடையில் இருந்தார். அவர் எங்கள் கட்சிக்காரர் என நான் நினைத்தேன். 

BJP leader slaps policeman on duty in Raichur
Author
Karnataka, First Published Nov 3, 2021, 4:31 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.பாப்பாரெட்டி, ராய்ச்சூரில் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரரை அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BJP leader slaps policeman on duty in Raichur

கர்நாடக மாநிலம்,ராய்ச்சூர், மேற்கு காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராகவேந்திராவிடம் பாப்பாரெட்டி வாக்குவாதம் செய்து அவரை அறைந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது.

சமீபத்தில் சிந்தகியில் நடந்த தேர்தல் பேரணியில் தலித் தலைவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததாகக் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையாவுக்கு எதிராக பாஜக பட்டியல் சாதியினர் மோர்ச்சா நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.

இதனால், தலித் சமூகத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையா அவமதித்ததாகக் கூறி, பாஜக தொண்டர்கள் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இருப்பினும், ராகவேந்திரா உட்பட மஃப்டியில் இருந்த சில போலீஸார் அவர்களைத் தடுத்து, போராட்ட இடத்தில் இருந்து உருவ பொம்மையை எடுத்துச் சென்றனர். அப்போதுதான் பாப்பாரெட்டி போலீஸ்காரர்களைப் பின்தொடர்ந்து வந்து ராகவேந்திராவை கன்னத்தில் அறைந்தார்.

BJP leader slaps policeman on duty in Raichur

பின்னர் பாஜகவினர் உருவபொம்மையை சேகரித்து எரித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாப்பாரெட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் ஒருவரை போலீஸார் மஃப்டியில் அழைத்துச் சென்றதாகக் கூறினார். "அந்த போலீஸ்காரர் சாதாரண உடையில் இருந்தார். அவர் எங்கள் கட்சிக்காரர் என நான் நினைத்தேன். பிஜேபி கொடியை ஏந்தி, சிலையை எடுத்துச் சென்றார். பாஜக தலைவர்களை, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையை சரமாரியாகத் தாக்கி வருகிறார் சித்தராமையா.

இதையும் படியுங்கள்:- கதறிக் கதறித் துடிக்கும் புனித் ராஜ்குமார் மனைவி... கண்ணீராய் ஊற்றெடுக்கும் அஸ்வினியின் காதல்..!

காங்கிரஸ் கட்சியினர் பலமுறை மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்கள் எடியூரபாவின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது அதை செய்ய விடாமல் போலீசார் தடுக்கவில்லை. சித்தராமையா மீது அவர்களுக்கு ஏன் போலீசாருக்கு இவ்வளவு அன்பு? அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. ஆனால், சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்கவிடாமல் போலீஸார் எங்களைத் தடுக்க முயன்றனர்” என்று பாப்பாரெட்டி கூறினார்.BJP leader slaps policeman on duty in Raichur

 பாப்பாரெட்டி கான்ஸ்டபிளிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக, அவர் போராட்டம் நடத்திய கட்சி ஊழியர்களுக்குள் ஊடுருவி அவர்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து ராய்ச்சூர் காவல் கண்காணிப்பாளர் நிகில் பி,  பாப்பாரெட்டி மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:- எனக்கு அவங்கப்பா வயசு... என்னை இன்னொரு பெண்ணோட தொடர்புபடுத்துறாங்க... சோனியாவுக்கு கலங்கடிக்கும் கடிதம்..!

“இந்தச் சம்பவத்தைப் பற்றி நான் அறிந்தேன், மேலும் தகவல்களைச் சேகரிப்பதற்காக நான் இப்போது கான்ஸ்டபிளைச் சந்திக்கிறேன். அதை நாம் விட முடியாது. நாங்கள் சிக்கலை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம், விரைவில் வழக்கு பதிவு செய்வோம், ”என்று எஸ்.பி., நிகில் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios