தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய தேசிய கல்வி கொள்கை தேவை என 50 லட்சம் கையெழுத்துகள் இடப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். திமுகவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கை, நான்கு மொழி கொள்கை வரை உள்ளன. இதன்மூலம் திமுக இரட்டை வேடம் போடுவது உறுதியாகியுள்ளது.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.


அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எல். முருகன், “அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது. எங்களின் கூட்டணி வலிமையானது” என்று எல்.முருகன் தெரிவித்தார். அதிமுக -பாஜக இடையே முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், அதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்த்த எல்.முருகன், “கூட்டணி தொடர்கிறது” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.