இதுதொடர்பாக ஹெச். ராஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து இந்து சமுதாய ஆண்களுக்கும் ஆண்மை (சரக்கு) இல்லை. எனவே உங்கள் பெண்கள் எங்களிடம் ( சில ஜாதி பெயர்களைச் சொல்லி) வருகிறார்கள் என்று இன்னமும் கேவலமாகப் பேசிய தீயசக்தி திருமாவளவன் இன்று ஸனாதன தர்மத்தில் பெண்கள் விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ள காலம் நவராத்திரி.
துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை மூன்று மூன்று நாட்கள் பூஜித்து 10ம் நாள் வெற்றிக்குறிய விஜயதசமி விழா கொண்டாடும் காலம். இந்த தீய சக்தியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுகவை வேரோடு வீழ்த்தும் வரை இந்த தீயசக்தி திருமாவளவன் இப்படித்தான் பேசும். நான் ஏற்கனவே மனு ஸ்ம்ருதியில் உள்ளதை என் முந்தைய பதிவில் கூறியுள்ளேன். இந்த மூடர் கூட்டம் சமஸ்கிருதம் படிக்காமலே சமஸ்கிருத நூலில் உள்ளதை எப்படி பேசுகின்றனர்?
இந்த இந்து விரோத கும்பல் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும் இந்த சமூகவிரோதியை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும். பல இந்து உணர்வாளர்கள் நாம் ஒரு தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.