மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமண விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர்களின் ஒருவரான முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:- சிக்கியது வீடியோ ஆதாரம்... கனிமொழிக்கு ஆப்பு உறுதி..!

 

அப்போது, பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், கலைஞருக்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், எங்களை வீழ்த்தி வெற்றி தளபதியாக உள்ளார். அதனால் நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது உள்ளது. அவரிடம் கற்றுக்கொள்ளவும் அதிகம் இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிங்க;- கோர்ட் அதிரடி..! ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் இல்லை... சிறை உறுதி..!

 

தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய  கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக காலூன்ற பெரும் தடையாக உள்ள திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள வரை பொதுமேடையில் கட்சி பாகுபாடின்றி அவர் இப்படி புகழ்ந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேசப்பட்டு வருகிறது.