ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.  

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையை சார்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று தருவதற்கு ரூ.305 கோடி சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த 20ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையென மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தம்மை கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிதம்பரத்தை கைது செய்யாமல் எங்களால் உண்மையை வரவழைக்க முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் தொடர்ந்த முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில் 'ப.சிதம்பரம் மீதான வழக்கில் விசாரணை சரியான வழியில் செல்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைதாகியுள்ள சிதம்பரம் அமலாக்கத்துறையாலும் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது