தமிழக அமைச்சர் தன்னை பொறுக்கி என கூறியுள்ளதாகவும்,  உண்மைதான் நான் பொறுக்கி தான் என பொதுக்கூட்ட மேடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கெட்டவர்களின் கூடாரம் திமுக

தமிழக பாஜக- திமுக இடையே தொடர் வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது.திமுக அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். முதலமைச்சரின் துபாய் பயணம், மின் வாரியத்தில் முறைகேடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். மேலும் தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். நேற்று கர்ப்பினி பெண்களுக்கு ஊட்சத்து பொருட்கள் வாங்குவதில் 77 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். மேலும் அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பான புத்தகத்தை தமிழக ஆளுநரிடம் வழங்க இருப்தாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பாக மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க கூட்டம் இராதாபுரம் செட்டிகுளத்தில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், பராசக்தி படத்தில் கருணாநிதி கூறியிருப்பார் கெட்டவன் எட்படி இருப்பார் என கூறியிருப்பார். அந்த வகையில் தற்போது திமுக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

கண்ணுக்கு தெரியாத ஊழல்

கொடியவர்களின் கூடாரமாக, மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பவராகவும், ஊழல் மலிந்தவராக ஊழலை வைத்து சம்பாதிக்கும் அரசியல் வாதியாக திமுக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் 2014 முன்பு வரை 5 கோடி50 கழிப்பறைகள் மட்டுமே நாடு முழுவதும் கட்டப்பட்டிருந்தது. பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார். இந்த 8 ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை ஒரு குண்டூசி திருடி விட்டார் என்று ஒரு அமைச்சர் மீது புகார் கொடுக்க முடியாது நிலை தான் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஒரே ஆண்டில் திமுக செய்துள்ள சாதனை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழக அமைச்சர்கள் எங்கு தொட்டாலும் ஊழல் என்ற நிலைதான் உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத விஷயத்தில் தான் ஊழல் செய்வார்கள் மின்வாரியத்தில் ஊழல், 2ஜி ஊழல், ராமர் பாலத்தை சீரமைத்து சேது சமுத்திர திட்டம் செயல்படுத்துவதாக கூறி ஊழல் என நேரடியாக சென்று பார்க்க முடியாத அளவிற்கு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டினார். 

நான் பொறுக்கி தான்

 அண்ணாமலை யார் என்றால் பெரிய பொறுக்கி என திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார், திமுக அமைச்சர் எனக்கு கொடுத்துள்ள பெயர் பொறுக்கி உண்மையாகவே அமைச்சர் கூறிய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பொறுக்கி தான், ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுகவின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி சாதாரண மனிதனாக பருக்கி பொறுக்கி எடுத்து வந்து மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி, அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் நல்ல மனத்தோடு கம்பீரமாக ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். இதே போல மற்றொரு அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னை பக்குவம் இல்லாமல் பேசுவதாக கூறியுள்ளார், உண்மைதான் நான் பக்குவம் இல்லாதவன் தான் எப்படி கட்சி மாறுவது என்றும் எப்படி ஊழல் செய்வது என்று தெரியாத பக்குவம் இல்லாதவன் எனவும் அண்ணாமலை கூறினார்.

இதையும் படியுங்கள்

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோவில்கள்..!அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும்- மதுரை ஆதினம் ஆவேசம்