பாஜகவில் விழுந்த அடுத்த விக்கெட்... ஐடி விங் செயலாளர் திடீர் ராஜினாமா!!
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னதாக தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் நேற்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும் இதுதொடர்பான அவரது அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தடையின்றி தலைவிரித்தாடும் இ-சிகரெட்.. இளைஞர்கள் சீரழிந்து போறாங்க.. காப்பாத்துங்க.. கதறும் அன்புமணி..!
அத்தோடு மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜகவில் இருந்து மேலும் ஒருவர் விலகியுள்ளது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் இபிஎஸ்.! மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு- விரக்தியில் ஓபிஎஸ்
பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளராக இருக்கும் திலீப் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.