தமிழகத்தில் பாஜக பற்றி கவலைப்படாதீங்க.. அவங்க பூஜ்ஜியம் தான்.. திருமாவை தூக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்!
திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றி காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு கொள்கை கர்ஜனையாக இருக்கும். அன்று கழகத்திற்குள் முழங்கினார். இன்று கழக கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார்.
இந்தியா கூட்டணியை அமைத்தார்கள் இந்தியாவில் ஆட்சியை பிடித்தார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும் என விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேதசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்:- திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றி காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு கொள்கை கர்ஜனையாக இருக்கும். அன்று கழகத்திற்குள் முழங்கினார். இன்று கழக கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன்.
இதையும் படிங்க;- தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை நடவடிக்கை- திமுக எச்சரிக்கை
தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோல தான் திமுகவும் விடுதலை சிறுத்தை கட்சியும். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவல்ல, அரசியல் உறவல்ல. கொள்கை உறவு. அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம் திமுக. பட்டியலின மக்களின் நலனை காக்கின்ற அரசு தான் நமது திராவிட மாடல் அரசு.
தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தமிழ்நாட்டில் பாஜகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது, அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் இண்டியா கூட்டணி. இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களை காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது. இதுதான் நமது இலக்கு.
இதையும் படிங்க;- பாஜக ஒரு திட்டம் அறிவிச்சு 8 ஆண்டு ஆச்சு.. இன்னும் வரலை!அது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல-ஸ்டாலின்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது. ஜனநாயகம் இருக்காது. மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நம் கண் முன்பே ஜம்மு காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றினார்கள். உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பாஜக ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும். இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை அமைத்தார்கள் இந்தியாவில் ஆட்சியை பிடித்தார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.