நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடியும் இன்னும் சில நிமிடங்களில் முடிய உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரத்தின்போது கோட்சேவை இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இரு தினங்களாக தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் துவக்கிய போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்யய அனுமதி மறுக்கப்பட்டது.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் வியாழன் இரவு கமல் பங் கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், மேடையை நோக்கி செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டன. இந்நிலையில் நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை முடியும் தருவாயில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் புதிய பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

சுமார் மூன்றரை நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்த போது அவர் சந்தித்த  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காளியப்பன் என்ற வாலிபரின் குடும்பத்தினர் பற்றி பேசியுள்ளார். இறுதியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவ நினைவு தினம் வரவுள்ள நிலையில், அது நினைவு நாள் மட்டும் அல்ல.. அதற்கு காரணமாக அமைந்தவர்களை, நமது நினைவில் இருந்து  நிரந்தரமாக அகற்றும் நாளாகவும் அமைய வேண்டும் என்று உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாங்களும் டிவிட்டர்லயே ஓட்டு போட்ருவோம் ஆண்டவரே. நீங்க மக்களுக்கு என்ன நல்லது செய்யபோறனு சொல்லி ஓட்டு கேட்கலாமே ஏன் மீண்டும் பழைய செய்திகளை படமாக்கி ஓட்டு கேட்கணும் என கமலை விமர்சித்து வருகின்றனர். ’’பேசவிடாமல் இவரை தூக்கிவிட்டு திமுக ஓட்டை பிரிக்கிறதோ பாஜக?’’ என ஒருவர் சந்தேகம் கிளப்பி உள்ளார் மற்றொருவர்.