Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத் தேர்தலில் 40-யும் தட்டி தூக்கப்போவது நாமதான்! இந்தியா கூட்டணியால் நடுக்கத்தில் பாஜக! CM ஸ்டாலின்

தற்போது நடந்த இடைத்தேர்தலில் கூட இந்தியா கூட்டணி கணிசமான வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. 

BJP in trembling with India alliance! CM Stalin tvk
Author
First Published Sep 13, 2023, 1:43 PM IST

சனாதனம் குறித்து ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற  திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில்;- சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்தது திமுக அரசுதான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் கட்சிதான் திமுக. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6வது முறையாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கித் தருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். 

இதையும் படிங்க;- சனாதனத்திற்கு எதிராக பேசுவதா.! நாக்கை பிடுங்குவோம்... கண்ணை நோண்டுவோம்-உதயநிதிக்கு கஜேந்திர சிங் எச்சரிக்கை

BJP in trembling with India alliance! CM Stalin tvk

ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்கள், அந்த இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். 100க்கு 91 சதவீதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் சரி, தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 

BJP in trembling with India alliance! CM Stalin tvk

தற்போது நடந்த இடைத்தேர்தலில் கூட இந்தியா கூட்டணி கணிசமான வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை உணர்ந்த பாஜக ஆட்சியார்கள் இப்போது நாட்டின் பெயரையே மாற்றம் துணிந்துவிட்டார்கள். 

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு 'இந்தியா' கூட்டணிக்குப் பலம் சேர்க்க வேண்டும். பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிக்க வேண்டும். 

இதையும் படிங்க;-  மகளிர் உரிமைத்தொகை.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.! வெளியான தகவல்!

BJP in trembling with India alliance! CM Stalin tvk

சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நாம் இடமளித்துவிடக் கூடாது. பாஜகவின் ஊழல் மதவாத சர்வாதிகார போக்கை அம்பலப்படுத்தி 2014 தேர்தலில் தோற்கடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios