எப்படியெல்லாம் திணிக்க முடியுமோ அப்படியெல்லாம் இந்தியை திணிக்கிறாங்க... பாஜக மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!!
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு பாஜக மாறியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு பாஜக மாறியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக 2 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 2 ஆண்டு கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கான ஆட்சியாகவும், சமூக நீதிக்கான ஆட்சியாகவும், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுகிற ஒரு நிர்வாகமாகவும் இயங்கி கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: டிடிவி தினகரனை சந்திக்கும் ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் எதிர் தரப்பு - அடுத்து என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி, பாராட்டு தெரிவிப்பதுடன் எஞ்சிய 3 ஆண்டுகளும் மீண்டும் மக்களுடைய செல்வாக்கை பெற வாழ்த்துகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 80 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: மாணவியின் உள்ளாடையைக் கழட்டி சோதனை செய்த விவகாரம்... சீமான் கடும் கண்டனம்!!
நிலுவையில் உள்ள சில வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்தெந்த வகையில் எல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ அந்தந்த வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அனைத்து விதத்திலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.