மாணவியின் உள்ளாடையைக் கழட்டி சோதனை செய்த விவகாரம்... சீமான் கடும் கண்டனம்!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டி சோதனை செய்த விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

seeman has condemned the issue of taking off the underwear of a student who appeared for the neet exam

நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டி சோதனை செய்த விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கட்டாயப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வில், சோதனை என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பது கொடுமையின் உச்சமாகும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்ட கொடும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டுக் கானல் நீராகியது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது! முக்கிய கட்சிகளின் செல்வாக்கு எப்படி?

தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பின்பும், நீட் தேர்வை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும். நீட் தேர்வு தோல்வி, தேர்வு பயம், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது சோதனை என்ற பெயரில் காதணி முதல் உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது மேலும் அவர்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்கவே கூடும். இதனால் உருவாகும் பதற்றமான சூழலால் தேர்வில் முழுக் கவனம் செலுத்தமுடியாத நெருக்கடியும் ஏற்படும். இது நீட் தேர்வுத் தோல்விகளும், தற்கொலைகளும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மாணாக்கர்களைப் பயங்கரவாதிகளைப் போல சோதனை செய்து, உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது சிறிதும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும்.

இதையும் படிங்க: ரூ.171 கோடி செலவில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு புதுப்பிப்பு.. ஆம் ஆத்மியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

அதிலும் மற்ற மாநிலத்தில் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் மட்டும் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்குப் பின்னால் தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவராவதைத் தடுக்க, திட்டமிட்டு வேலை செய்வதாகக் கருத வேண்டியுள்ளது. நீட் தேர்வின் பெயரால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கினை விரைவுபடுத்த உரிய சட்டப்போராட்டதை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios