பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக என்பது மூழ்கிகொண்டிருக்கிற கப்பல். இதைத்தான் மு.க. அழகிரி கூறியிருக்கிறார். சுயமரியாதை உள்ளவர்கள், கெளரவமாக இருக்க நினைப்பவர்கள் திமுகவில் இருக்க முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு சலாம் போடுபவர்கள்தான் திமுகவில் இருக்க முடியும்.
சுயமரியாதை உள்ளவர்கள் அந்தக் கட்சியில் யாரும் இருக்காதீர்கள். சுயமரியாதையோடும் தேசபக்தியோடும் வெளியே வர வேண்டும். வாருங்கள் ஒன்றிணைவோம் என்று அவர்களையெல்லாம் நான் அழைக்கிறேன். பன்மொழித் தன்மையை வெளிப்படுத்தும் வகையிதான் புதிய தேசிய கல்வி கொள்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் எல்லாம் சர்வாதிகாரிகள். விநாயக சதுர்த்தி விழா என்பது சமுதாய ஒற்றுமை விழா. இதற்கு அரசு தடை விதித்திருப்பது ஏற்புடைய செயல் அல்ல.” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.