திமுகவின் சமூகநீதி பேச்சு வெறும் உதட்டளவிலானது  பட்டியல் சமுதாய மக்களை இழிவுபடுத்திப் பேசிய டி.ஆர் பாலு மற்றும் தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொந்தளித்துள்ளார். திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் இந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அங்கு பேசிய தயாநிதி மாறன் , தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் .  நாங்கள் என்ன  தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.  தயாநிதி மாறனின் இந்த பேச்சு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி வெறி எண்ணம் அவரது ஆழ் மனதில் ஊன்றியிருப்பதையே இது காட்டுவதாக பலரும் கருதுகின்றனர் இது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர் 13-5-2020 அன்று தலைமைச் செயலாளரை சந்திக்க சென்ற திமுக தலைவர்கள் டி.ஆர் பாலு மற்றும் திரு தயாநிதி மாறன் ஆகியோர் முதன்மைச் செயலாளரை மக்கள் பிரச்சினைக்காக சந்தித்ததாக தெரியவில்லை விளம்பரத்திற்காக சந்தித்தாக தாகவே நினைக்கிறேன் .  உண்மையிலேயே இவர்கள் கூறும் படி ஒரு லட்சம் மனுக்கள் இருக்குமானால் அவை அனைத்தையும் பிரித்து உரிய இலாக்காக்களுக்கு அனுப்ப அவகாசம் தேவைப்படும் ஆனால் அதற்கு காலக்கெடு கேட்டு வாதிட்டதும் அந்த மனுக்களின் கட்டுகளை பல நபர்களுடன் எடுத்துச் சென்றும் அதை படம்  எடுத்தது போன்றவை திமுகவினரின் மலிவு பிரச்சார   யுக்தியாகவே  தெரிகிறது திமுகவின் ஒன்று கூடுவோம் வா  முகநூல் பக்கத்தில் லைக் செய்து தொடரவும் என்றுள்ள பக்கத்தில் சென்று பார்த்தாலே அதில் 80 சதவீதம் பேர் பீகாரை  (பிரசாந்த் கிஷோர் உபயமோ) சேர்ந்தவராக இருப்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டி உள்ளேன் நோய் தொட்டு சமயத்தில் சீன் போட நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மேலும் டி ஆர் பாலு மற்றும் திரு தயாநிதி மாறன் எங்களை  முதன்மை செயலாளர் மரியாதைக் குறைவாக நடத்தினார்  அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று கூறியுள்ளார் ,  இது டி.ஆர் பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக்காட்டுகிறது .  ஈவேரா காலம் முதல் தி.க , திமுக பட்டியல் சமுதாய மக்களுக்கு  எதிரான  அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது ,  ஏனெனில் மதுரையில் பட்டியல் சமுதாய மக்களின் ஆலயப் பிரவேசத்தை ஈவேரா எதிர்த்தது உலகறிந்த விஷயம் .  திமுகவின் சமூகநீதி பேச்சு வெரும் உதட்டளவிலானது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது . திமுகவின் இந்த பட்டியல் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் தங்களது நடவடிக்கை மற்றும் பேச்சிற்கு டி.ஆர் பாலு மற்றும் தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .