பாஜகவின் பொது செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் 13 ஆண்டுகளாக பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியவர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸிலிருந்து திரும்பி விட்டார். இணைச் செயலாளர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷ் உயர்த்தப்பட்டுள்ளார்.

இது குறித்த உத்தரவை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தலைமை நிர்வாக தேசிய பொதுச் செயலாலர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். இதன்படி உடனடியாக அந்த பதவியில் செயல்படத் தொடங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

பி.எல்.சந்தோஷ் கர்நாடகாவில் எட்டு ஆண்டுகள் கட்சியின் அமைப்பு பொது செயலாளராக இருந்தார். அவர் 2014 -ல் தென் மாநிலங்களுக்குப் பொறுப்பான தேசிய அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.