நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... வரவேற்பு குறித்து பாஜக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!!

பாஜக நிர்வாகிகள் அனைவரும் வெற்றிகரமாய் பிரதமர் மோடியின் வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

bjp executives sholud give a warm welcome to pm modi tomorrow says annamalai

பாஜக நிர்வாகிகள் அனைவரும் வெற்றிகரமாய் பிரதமர் மோடியின் வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி, நாளை (ஏப்.8) தமிழகம் வருகிறார். இதை அடுத்து அவரை வெகு விமர்சையாக வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் அனைவரும் வெற்றிகரமாய் பிரதமர் மோடியின் வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறது அதிமுக... அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்ட பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்; ஆனால் சிவகங்கையில்... ஹெச்.ராஜா சொல்வது என்ன?

பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேளதாளங்கள் என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் வண்ணக்கோலங்கள் ஆக, திரும்பும் திசையெல்லாம் திருவிழாவாக மகத்தான வரவேற்பளிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios