கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறது அதிமுக... அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!
கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடக அதிமுக நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். சுமார் 63 பேரை கர்நாடக அதிமுக நிர்வாகிகளாக நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்ட போது கர்நாடகா தேர்தலில் போட்டியிடகிறாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் விவகாரம்... முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!!
இதுக்குறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி நடத்தும் செயற்குழுவாக இருந்தாலும் சரி, பொதுக்குழுவாக இருந்தாலும் சரி அது சட்டவிரோதமானது. பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். நீதிமன்றத்தில் கழக சட்டப்படி எடுத்து வைத்த வாதம் அடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆளுநர் கூறிய நிலையில் அதற்கு கருத்து கூற விரும்ப வில்லை.
இதையும் படிங்க: மெஜாரிட்டி இருந்தா..வம்புக்கு இழுத்த ஆளுநர்.. ‘லா பாயிண்ட்டை’ பிடித்த ஸ்டாலின் - வேற பக்கம் திரும்புதே.!
கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். திருச்சி மாநாட்டில் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இக்கட்சியை ஆரம்பித்தார்களோ அங்கே அது நிரூபணமாகும். 2026 வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது. ஆனால் சட்டவிதிகளுக்கு புறம்பாக சர்வாதிகார பணபலம் படைத்தவராக செயல்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.