தடையை மீறி வேல் யாத்திரை நடத்த இருந்த பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த 6 பாஜக நிர்வாகிகளை இரவோடு இரவாக கைது செய்தது காவல்துறை. விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாஸ்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாஜகவின் வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறியது. இதனால் பாஜகவின் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேல் யாத்திரையை தொடங்குவோம் என அக்கட்சியின் தமிழக மாநில துணைத்தலைவர் வி. பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.அதே சமயம் அரசின் உத்தரவை மதித்து பாஜக வேல் யாத்திரையை கைவிடவேண்டும். தடையை மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தடையை மீறி இன்று திருத்தணியில் எல்.முருகன் வேல்யாத்திரை நடத்த இருப்பதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.