அம்பேத்கரின் விசிவாசிகளாக பாஜகவினரை ஏற்க முடியாது… திருமுருகன் காந்தி கருத்து!!
அம்பேத்கரின் விசிவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் விசிவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் சாசனத்தை அனைவருக்கும் சமமானதாக மாற்றி காட்டியவர் அம்பேத்கர். ஆனால் இன்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை ஒரு தரப்பினருக்கு மட்டுமே என்ற நிலை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கூடாது. சமூகரீதியாக தான் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: காவி உடையில் அம்பேத்கர்.. போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ்.!
அனைவருக்குமான கல்வி, மின்சரம் தனியார் மயமாக்கப்படுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கரின் விசுவாசிகள் என்று பொய்யான பிரச்சாரத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். சமத்துவத்திற்கும் சாமானிய மக்களுக்கும் எதிரான கொள்கையுடனும் திகழும் அவர்களை அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள் அனுமதிக்ககூடாது என்று தெரிவித்தார்.