டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

 

மோடி பதவியேற்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், கமல் ஹாசன் தரப்பினர், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. கமல் ஹாசன் கட்சி தொடங்கிய பிறகு பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பரபரப்பை பற்ற வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது தீவிவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது என மோடி பதிலளித்து இருந்தார். 

இது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இவற்றை எல்லாம் மறந்து கமல் ஹாசனுக்கு பாஜக அழைப்பு விடுத்து இருக்கிறது.