அதேபோல நடிகர் விஜய் அனிதா உயிரிழந்த போது அவரது இல்லத்திற்கு சென்றது மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக போனது இதெல்லாம் அரசியல் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அதெல்லாம் ஒரு  சந்தர்ப்ப சூழ்நிலை அடிப்படையில் எடுத்த முடிவுகள்தான், இதையெல்லாம் வைத்து விஜய் மிகப்பெரிய ஒரு போராளி என்றெல்லாம் கூற முடியாது.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு க்கு பிறகு அவர் பாஜகவின் கருவியாக மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது, திமுகவைப் பலவீனப்படுத்த விஜய்யை பாஜக பின்னாலிருந்து இயக்குகிறது என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த அரசியல் நிலைபாடு தவறானதில்லை என விஜய் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் கருத்து பகிர்ந்து கொண்டுள்ளார் என்றும், அவரின் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்க்கும்போது அவர் பாஜகவில் கருவியாக மாறிவிட்டாரோ என சந்தேகிக்க தோன்றுகிறது என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.

அரசியலுக்கு இதோ வரப்போகிறேன், அதோ வரப்போகிறேன் என ஆசை காட்டி சொந்த ரசிகர்களுக்கே பட்டை நாமம் போட்டவர்தான் நடிகர் ரஜினிகாந்த். அதேபோல நடிகர் விஜய் எப்போது அரசியல் களத்துக்கு வரப்போகிறார் என்ற ஏக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்களை களமிறக்கி இதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என சிக்னல் காட்டினார் விஜய். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வார்டுகளில் வெற்றியை பதிவு செய்துள்ளனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் விஜய் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை மேலோங்கியுள்ளது. ஆனால் இதுவரையிலும் முறையாக தனது காட்சியை பதிவு செய்யாத விஜய், வெளிப்படையாக அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறாமல், வெறும் ரசிகர் மன்றத்தை வைத்து மக்களை ஆழம் பார்த்து வருகிறார் என்ற விமர்சனம் அவருக்கு எதிராக எழுந்துள்ளது.

அதனால்தான் அவர் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களை ஆதரித்து வெளிப்படையாக பிரச்சாரம் செய்யவில்லை, ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால் அதை தனது வெற்றியாக கிளைம் செய்வதற்கும், அதே அவர்கள் தோல்வி அடைந்து விட்டால் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறும் வகையில்தான் அவரது நடவடிக்கைகள் இருந்து வருகிறது என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் தொடர்ந்து விஜய் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருபுறம் அரசியல் பேசி வருகிறார், சில ஆண்டுகளுக்கு முன்னர் மெர்சல்படம் அதற்கு சிறந்த உதாரணம், அதில் அரசியல் பேசி பாஜகவை அர்ச்சியடைய வைத்தார், தனது திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் பாஜகவின் திட்டங்களை விமர்சித்துப் பேசினார், அது அப்போது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு பாஜக தலைவர்கள் விஜய்யை தாக்கத் தொடங்கினர்,

குறிப்பாக எச்.ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்றும், இந்த பெயர்தான் அவரை இப்படி பேச வைக்கிறது என விமர்சித்தார். அப்போது பாஜகவுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜயின் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் அதில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என தகவல்கள் கூறப்பட்டது,

அதன் பிறகு பாஜகவை வெளிப்படையாக விமர்சிப்பதை நடிகர் விஜய் நிறுத்திக் கொண்டார். இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், மொத்தத்தில் விஜயின் அரசியல் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.இந்நிலையில் விஜய்யை விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100 பேர் வெற்றி பெற்றதாக கூறி அவர்களிடம் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். ஆனால் உண்மையிலேயே வெற்றி பெற்றவர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இந்த விவகாரத்தில் விஜய் மிகவும் சாதுரியமாக நடந்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக இவர்கள் எனது வேட்பாளர்கள் என விஜய் கூறவில்லை. 

இதனுடைய அர்த்தம் என்னவென்றால், அவர்கள் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை தமது வெற்றியாக எடுத்துக் கொள்வதும், தோல்வியடைந்தால் அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிவிடுவதும்தான் அவருடைய திட்டம். ஏதோ விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கினால் தேர்தல் களமே தலைகீழாக மாறிவிடும் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் ஏற்படுத்து வருகின்றனர். உண்மையில் அந்த அளவுக்கு விஜய்க்கு களத்தில் செல்வாக்கு இல்லை, கிராம்புற உள்ளாட்சி தேர்லில்ல வார்டுகளில் கிடைத்த அளவுக்குகூட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிடைக்காது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி விஜய்கான வெற்றி அல்ல, அது வேட்பாளர்களுக்கு உள்ளூரில் இருக்கிற செல்வாக்கின் அடிப்படையில் கிடைத்த வெற்றிதான், அது விஜய்க்கும் நன்கு தெரியும்.
அப்படி விஜய் அரசியலுக்கு வந்தாலும், அவர் விஜயகாந்தை பின்பற்றுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இயல்பிலேயே விஜயகாந்துக்கும் விஜய்க்கும் அதிக வேறுபாடுகள் வித்தியாசங்கள் உள்ளது. உண்மையிலேயே கொடை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த், ஆனால் விஜய் அப்படி அல்ல.

அதேபோல நடிகர் விஜய் அனிதா உயிரிழந்த போது அவரது இல்லத்திற்கு சென்றது மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக போனது இதெல்லாம் அரசியல் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அதெல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அடிப்படையில் எடுத்த முடிவுகள்தான், இதையெல்லாம் வைத்து விஜய் மிகப்பெரிய ஒரு போராளி என்றெல்லாம் கூற முடியாது. இதே விஜய்தான் அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததற்குப்பிறகு எந்த விஷயத்திலும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். ஏன் அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்த பிறகு தமிழ்நாடு சுபிக்ஷ பூமியாக மாறி விட்டதா? தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் நடந்து வரும்நிலையிலும் இதுவரை விஜய் அமைதியாகவே இருந்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவருடன் விஜய் பேசும்போது, நடிகர் ரஜினிகாந்தின் பாஜக ஆதரவு நிலைபாடு என்பது தவறு இல்லை, அது சரியான விஷயம்தான் என விஜய் கருத்து கூறியுள்ளார். இதையெல்லாம் மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஐடி ரெய்டுக்குப் பிறகு விஜய்யும் பாஜகவின் கருவியாக மாறி கொண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இன்றைக்கு திடீரென நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்கு காரணம் என்ன என்றால்? எப்படியாவது திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்றதான், பாஜகவால் அதை செய்ய முடியாது, பாஜக தமிழ்நாட்டில் பூஜ்ஜியம்தான், அதனால் வலுவான ஒருவரை களமிறக்கி திமுகவைப் பலவீனப்படுத்த வேண்டுமென பாஜக திட்டமிடுகிறது. அதற்காக விஜயை பாஜக பயன்படுத்துகிறது, அதனால்தான் விஜய்யும் இது போன்ற செயல்பாடுகளில் இறங்குகிறார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் காலம்தான் இந்த சந்தேகம் உண்மையா பொய்யா என்பதை முடிவு செய்யும் என்றும் பிஸ்பி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.