அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து,‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்புக் கழகம் (ADR)’ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த ஆய்வில் தான் பாஜக சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக, திரிணாமூல் காங்கிரசின் சொத்து மதிப்பு சுமார்10.86 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் ரூ. 26 கோடியே 25 லட்சமாக திரிணாமூல் சொத்து மதிப்பு, 2017-18 நிதியாண்டில்ரூ. 29 கோடியே 10 லட்சமாகஉயர்ந்துள்ளது.


 
பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு 2016-17இல் ரூ. 680 கோடியே 63 லட்சமாக இருந்தது, சுமார் 5.30 சதவிகிதம் அதிகரித்து ரூ. 716 கோடியே72 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதேகாலகட்டத்தில், 2016-17 முதல் 2017-18 வரைரூ.854 கோடியே 75 லட்சம் என்ற அளவிலிருந்த காங்கிரசின் சொத்து மதிப்பு, ரூ. 724 கோடியே 35 லட்சமாக சுமார்15.26 சதவிகிதம் குறைந்துள்ளது.