#BREAKING பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு சிக்கல்.... வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு...!
பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக, அதிமுக, மநீம, நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 6,319 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இதில் தகுதி உள்ள மனுக்கள் ஏற்கப்பட்டு மாலையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற விவரம் வெளியிடப்படும். மேலும் வேட்பு மனுக்களை வரும் 22ம் தேதி மாலைக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரை 46 வேட்பாளர்கள் 47 வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதான பரிசீலனை இன்று தொடங்கிய போது, அண்ணாமலை வேட்புமனுவில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டினர். அண்ணாமலை மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதனை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.