துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின்  புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அமித்ஷா, சென்னை,  ராஜ்பவனில் ஓய்வெடுத்தார்.  அப்போது தமிழக பாஜக தலைவர்களும், அதிமுக.,  சார்பாக சில முக்கிய பிரமுகர்களும் , அரசியல் ஆலோசகரும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான நிலையத்திலிருந்து, நேரடியாக ராஜ் பவனுக்கு சென்ற அமைச்சர். முதலில் ஆளுநரிடம் தமிழ்நாடு நிலவரம் குறித்து பேசினாராம்.  பின்னர், தமிழக பாஜக முக்கிய பிரமுகர்களை சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார்.  பின்னர் அதிமுக மற்றும் ரஜினி முகாம் நபர்களிடமும் பேசினாராம். 

விரைவில் பாஜக மேலிடத்தில்,  கலந்துபேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாராம்.  வேலூர் தேர்தலில் டஃப் கொடுத்த,  திமுகவை இனிவரும் தேர்தல்களில் ஒரு கை பார்த்துவிடுவது என அமித்ஷா,  முடிவெடுத்துள்ளாராம்.  இதற்காக சில வருடங்களுக்கு முன்பாகவே தயாராக இருந்த திட்டத்தை தற்போது தூசி தட்டி உயிர்ப்பிக்க முடிவெடுத்துள்ளாராம்.

ஏற்கனவே அதிமுக, பாஜகவின், கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துவிட்ட நிலையில்,  ரஜினிதான் கழுவுற மீனில் நழுவுற மீனாக தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.  இந்த நிலையில் ரஜினியின் 'தர்பார்' ஷூட்டிங் மும்பையில் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. 

அப்போதெல்லாம் அமித்ஷாவின் பல தூதுவர்கள் தொடர்ந்து ரஜினியை சந்தித்து அவரை ஒரு வழிக்கு கொண்டு வந்து உள்ளனராம்.  இந்த நிலையில் தான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த அமித்ஷா,  தனது திட்டம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளாராம். எது எப்படியோ...  பொது எதிரியான, திமுகவை ஒட்டு மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்பதுதான் அமித்ஷா மற்றும் உடனிருப்பவர்களின் எண்ணமாகும்.

எனவே அதற்கான சாம.. பேத..  தான தண்ட...  முறைகளை கையாண்டு,  திமுகவை டல் செய்வதோடு பாஜகவுக்கு தமிழகத்தில் உயிர் கொடுத்து தாமரையை மலர செய்வது என்ற தமிழிசையின் கோஷத்துக்கு உயிர் கொடுக்கவும் முடிவெடுத்து விட்டாராம் அமித்ஷா.

அமித்ஷாவின் இந்த திட்டத்திற்கு,  கிட்டத்தட்ட ரஜினியும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கூடிய விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும்,  பாஜக டெல்லி வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.  இதன் முதல் காட்டமாக தான் தமிழக மீடியாக்களை வசப்படுத்துவது,  பின்னர் எதிர்க்கட்சியினர் தலைவர்களை வளைப்பது என அடுத்தடுத்த அதிரடி ஏவுகணைகளை திமுகவிற்கு எதிராக திட்டமிட்டுள்ளனராம். அதோடு மட்டுமின்றி ஏகப்பட்ட பிரச்சினைகளை சுமந்து கொண்டிருக்கும் ஆ. ராசா,  கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோருக்கும் ஸ்பெஷல் கவனிப்புகள் இருக்குமாம்.