Asianet News TamilAsianet News Tamil

முற்றுகிறது பாஜக - ரஜினி மோதல்... பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி..!

கட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த வித மாற்று சிந்தனையும் இல்லாமல் தான் ரஜினியை போய்ச் சந்தித்தேன். ரஜினிக்கும், திருவள்ளுவருக்கு காவியடிக்க பாஜக முயற்சிக்கவில்லை. 

BJP and Rajini clash
Author
Tamil Nadu, First Published Nov 8, 2019, 3:13 PM IST

கட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த வித மாற்று சிந்தனையும் இல்லாமல் தான் ரஜினியை போய்ச் சந்தித்தேன்’’ என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பாஜக பூசம் காவி சாயத்தில் மாட்டிக் கொள்ள மாட்டேன். தனக்கும், திருவள்ளுவருக்கும் பாஜக காவி அடிக்கப்பார்க்கிறது. நானும் மாட்ட மாட்டேன். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்.  என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

BJP and Rajini clash

இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை அமைந்தங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ’’ரஜினிகாந்த் நல்ல மனிதருக்கு தலைசிறந்த விருது கிடைத்த போது அதனை பாராட்டத்தான் அவரை சந்தித்தேன். கட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த வித மாற்று சிந்தனையும் இல்லாமல் தான் ரஜினியை போய்ச் சந்தித்தேன். ரஜினிக்கும், திருவள்ளுவருக்கு காவியடிக்க பாஜக முயற்சிக்கவில்லை.  முரசொலி இடம் பஞ்சமி நிலமா? இல்லையா என்பதற்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்’’என பொன் ராதாகிருஷ்ணன் கடுப்பாகத் தெரிவித்தார். BJP and Rajini clash

முன்னதாக பாஜக மேலிடப்பார்வையாளர் முரளிதரராவ், ‘’ரஜினியை பாஜகவுக்கு வருமாறு யாரும் அழைக்கவே இல்லை’’என்று தெரிவித்தார்.  இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன்  கூறுகையில், ‘’ரஜினி தெரிவித்த சில கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், சில நேரங்களில் எதிராகவும் இருந்துள்ளன’’எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios