தமிழகத்தில் பிரிந்து கிடக்கின்ற அதிமுக  விரைவில் பாஜகவுடன்  இணையும்  என்று  சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மூன்றாக உடைந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேர் தலைமையில் அதிமுக தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த 3 அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரித்து வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற
விவாதத்தின்போது, பேசிய சிவசேனா கட்சியின்  எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல்,  : தற்போது, பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் இணைந்து விட்டதாக தெரிவித்தார்.

இதே போல் தமிழகத்திலும்  பிளவுபட்டுள்ள, அதிமுக ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில்பாஜகவுடன் இணைந்துவிடும் என்று  ஆனந்த்ராவ் அத்சுல் கூறினார்..