பிரதமர் மோடி இப்படி பேசுவது வெற்று வேசம்.. தமிழை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம்.. செல்வபெருந்தகை அட்டாக்
தமிழ்மொழி விரோதிகளான பா.ஜ.க. கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி விடவேண்டும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ் மொழியையும், அய்யன் திருவள்ளுவரையும் தூக்கி பிடிக்கிறார் என செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உலகம் முழுவதும் தமிழ்மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காகப் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் மொழிதான் தொன்மையான மொழி என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழ் அறிஞர்களை, ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையும் படிங்க;- எனக்கு காங். சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பமில்லை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவினர், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நெல்லையில் முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாதென்றும், சமஸ்கிருதத்தில்தான் நடத்தவேண்டுமென்று அடாவடியில் ஈடுபட்டு எதிர்த்தரப்பு கருத்துக் கூறியவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஆன்மீகப் பேச்சாளர் சுகிசிவத்தை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசியுள்ளனர். கருத்துக் கேட்புப் படிவங்களை கிழித்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பா.ஜ.க.வினர். பிரதமர் மோடி தமிழின் மேன்மை குறித்து பேசுவது வெறும் வெற்று வேசம். தமிழை அனைத்து துறைகளிலும் ஒழித்துக் கட்டுவதே பா.ஜ.க.வினரின் நோக்கம். சமஸ்கிருதம் மொழிக்குதான் நிதிநிலை அறிக்கையில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க;- நாங்கள் தான் எதிர்க்கட்சி.. ஆளுமை இல்லாத இபிஎஸ்.. கடுப்பாகி டக்கென மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்..!
தமிழ்நாட்டில் பா.ஜ.க. எவ்வாறேனும் காலூன்றி விடவேண்டும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ் மொழியையும், அய்யன் திருவள்ளுவரையும் தூக்கி பிடிக்கிறார் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா. ஆனால், தமிழ்மொழி விரோதிகளான பா.ஜ.க. கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என செல்வபெருந்தகை கூறியுள்ளார்.