Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் வாக்குகளை அள்ளும் பாஜக-அதிமுக கூட்டணி. யாருக்கு, எந்ததொகுதியில் எவ்வளவு வாக்குகள். சர்வே முடிவு..

உப்பளம் : தொகுதியில் காங்கிரஸ்-திமுக 35 சதவீத வாக்குகளையும் என்.ஆர் காங்கிரஸ் 16 சதவீத வாக்குகளையும், அதிமுக- பாஜக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

BJP AIADMK alliance in Puduvai To whom, how many votes in any constituency. Survey results ..
Author
Chennai, First Published Mar 8, 2021, 12:27 PM IST

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரை மையமாகக் கொண்டரெனைசான்ஸ் பவுண்டேஷன் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது. 

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் பெங்களூருவை மையமாகக் கொண்ட ரெனைசான்ஸ்  பவுண்டேஷன் என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில்  என். ஆர் காங்கிரஸ் அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்பதற்கான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  

1. உப்பளம் : தொகுதியில் காங்கிரஸ்-திமுக 35 சதவீத வாக்குகளையும் என்.ஆர் காங்கிரஸ் 16 சதவீத வாக்குகளையும், அதிமுக- பாஜக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

2. ஒலுகேரட் : காங்கிரஸ்-திமுக 37 சதவீத வாக்குகளும்,  என்.ஆர் காங்கிரஸ் 25 சதவீத வாக்குகளும், அதிமுக-பாஜக 38 சதவீத வாக்குகளும் பெறக்கூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

3. காமராஜர் நகர்:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 33 சதவீத வாக்குகளையும்,  என்.ஆர் காங்கிரஸ் 15 சதவீத வாக்குகளையும், அதிமுக பாஜக கூட்டணி 52 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

4. எம்பலம்:  காங்கிரஸ்- திமுக கூட்டணி 29 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளையும், பாஜக - திமுக கூட்டணி 49 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

5. ஆர்லேன்பேட்:  காங்கிரஸ்- திமுக கூட்டணி  30 சதவீத வாக்குகளும்,  என்.ஆர் காங்கிரஸ் 25 சதவீத வாக்குகளும், பாஜக- அதிமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது

6. மண்ண்டிபேட்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளும்,  என்.ஆர் காங்கிரஸ் 27% வாக்குகளும்,  அதிமுக-பாஜக கூட்டணி 46 சதவீத வாக்குகளும் பெரும் என கூறப்பட்டுள்ளது

7. திருபுவனை: காங்கிரஸ்-திமுக கூட்டணி 29 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 29 சதவீத வாக்குகளையும், அதிமுக-பாஜக கூட்டணி 42 சதவீத வாக்குகளையும் பெரும் என கூறப்பட்டுள்ளது. 

8. கதிர்காமம்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 6 சதவீத வாக்குகளையும், என் ஆர் காங்கிரஸ் 42 சதவீத வாக்குகளையும், பாஜக காங்கிரஸ் கூட்டணி 52 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது.

9. இந்திரா நகர்:  காங்கிரஸ் திமுக கூட்டணி,  29 சதவீத வாக்குகளையும், என் ஆர் காங்கிரஸ் 50 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 21 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

10. லாஸ்பேட்: காங்கிரஸ்-திமுக  கூட்டணி 45 சதவீத வாக்குகளையும்,  என்.ஆர் காங்கிரஸ் 16 சதவீத வாக்குகளையும், அதிமுக- பாஜக கூட்டணி 39 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

11. முத்தால்பேட்:  காங்கிரஸ்- திமுக கூட்டணி 18 சதவீத வாக்குகளையும்,  என்-ஆர் காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், அதிமுக பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

12. நெல்லித்தோப்பு:  காங்கிரஸ் திமுக கூட்டணி 34 சதவீத வாக்குகளையும், என். ஆர் காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளையும்,  பாஜக- அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது

13.  மணவெளி:  திமுக காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத வாக்குகளையும்,  என். ஆர் காங்கிரஸ் 23 சதவீத வாக்குகளையும்,  அதிமுக பாஜக கூட்டணி 42 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

14. நெட்டப்பாக்கம்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 36 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 24 சதவீத வாக்குகளையும்,  பாஜக-அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

15.  மங்கலம்: காங்கிரஸ் திமுக-கூட்டணி  28சதவீத வாக்குகளையும்,  என் ஆர் காங்கிரஸ் 31 சதவீத வாக்குகளையும்,  பாஜக- அதிமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது

16.  காலா பேட்டை:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 25 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 21 சதவீத வாக்குகளையும், பாஜக-அதிமுக கூட்டணி 54 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

17. ராஜ் பவன்:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், என். ஆர் காங்கிரஸ் 25 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

18. வில்லனூர்:  காங்கிரஸ்- திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 76 சதவீத வாக்குகளையும், பாஜக- அதிமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

19. முதலியார்பேட்டை:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 32 சதவீத வாக்குகளையும், என்-ஆர் காங்கிரஸ் 78 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

20. தட்டாஞ்சாவடி: காங்கிரஸ்-திமுக கூட்டணி 18 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 50 சதவீத வாக்குகளையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. 

21. பாகூர்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 42 சதவீத வாக்குகளையும்,  பாஜக- அதிமுக கூட்டணி 42 சதவீத வாக்குகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

22. அரியாங்குப்பம்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 32 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ்  21 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

23. ஊசுடு:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 21 சதவீத வாக்குகளையும்,  என். ஆர் காங்கிரஸ் 31 சதவீத வாக்குகளையும், பாஜக- அதிமுக கூட்டணி 48 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

24. நெடுங்காடு : காங்கிரஸ்-திமுக கூட்டணி 29  சதவீத வாக்குகளையும், என். ஆர் காங்கிரஸ் 16 சதவீத வாக்குகளையும், பாஜக-அதிமுக கூட்டணி 55 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

25. காரைக்கால் வடக்கு:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 9 சதவீத வாக்குகளையும், என். ஆர் காங்கிரஸ் 36 சதவீத வாக்குகளையும், பாஜக-அதிமுக கூட்டணி 55 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

26.காரைக்கால் தெற்கு:  திமுக-காங்கிரஸ் கூட்டணி 7 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், பாஜக-அதிமுக கூட்டணி 61 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

27. திருநள்ளார்: காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 சதவீத வாக்குகளும், என்.ஆர் காங்கிரஸ் 23 சதவீத வாக்குகளும்,  பாஜக அதிமுக கூட்டணி 60 சதவீத வாக்குகளும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

28. நிரவி பட்டினம்:  காங்கிரஸ்- திமுக கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், என்.ஆர் காங்கிரஸ் 21 சதவீத வாக்குகளையும், பாஜக- அதிமுக கூட்டணி 57 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

29. யானம்:  காங்கிரஸ்-திமுக கூட்டணி 67 சதவீத வாக்குகளையும்,  என் ஆர் காங்கிரஸ் 12 சதவீத வாக்குகளையும், பாஜக அதிமுக கூட்டணி 21 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

30. மாஹே:  காங்கிரஸ்- திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளையும்,  பாஜக- அதிமுக கூட்டணி 31 சதவீத வாக்குகளையும்,  அதேபோல் எல்டிஎல் எனப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 43 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஆகமொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக-அதிமுக கூட்டணி 23 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. அதில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு மூன்று தொகுதிகளும்,  எல்டிஎல் கட்சிக்கு 1 தொகுதியில் கிடைக்குமென தெரியவந்துள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி எல்டிஎப் கட்சிக்கு மாகே வில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. அதேபோல் 2 தொகுதிகளில் முடிவு கணிக்க கூடியதாக இல்லை எனபதும் தெரியவந்துள்ளது. ஆனால் இதில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள என்.ஆர் காங்கிரஸ் இந்திரா நகரில் மட்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios