BJP -Telungu desam allaince wil contiued
மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தியடைந்த சந்திர பாபு நாயுடு, பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும், ஆனாலும் தெலுங்கு தேசம் எரிர்கட்சிபோல் நடந்து கொள்ளும் என அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கித் தரவேண்டும் என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டதால் மாநில முதலமைச்சரும் ., பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

பாஜக கூட்டணியைவிட்டு விலகிவிடலாம் என்ற ரேஞ்சுக்கு அக்கட்சியினர் கொந்தளித்துப் போயிருந்தனர். இதையடுத்து பாஜக , கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க அக்கட்சி நிர்வாகிகள் அநற்று அமராவதியில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர மாநில அமைச்சருமான சவுத்ரி , பாஜகபுடனான தெலுங்கு தேசம் கூட்டணியை முறிக்க போவதில்லை என்றும், . ஆந்திராவுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்தததையடுத்து கூட்டணியை முறிக்க போவதில்லை என்ற முடிவை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த கூட்டத்தில், ஆந்திராவுக்கு நிதி அளிக்காவிட்டால் பாஜகவுடனான கூட்டணியை முறிபத்துக் கொள்வதில் எந்த சமரசமும் மேற்கொள்ளப் போவதில்லை என தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
