Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை நெருங்கிய பாஜக...! முதல் ஸ்டெப்!! இஸட் பிளஸ் பாதுகாப்பை உறுவ திட்டம்...! அடுத்து.?

சொல்லிக்கொள்ளும் அளவில் அச்சுருத்தல்களோ, மிரட்டல்களோ ஏதும் இல்லாதபோது அவருக்கு கமாண்டோ பாதுகாப்பு தேவையற்றது என தமிழகத்திலிருந்து  மத்திய அரசுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அவரின் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்படும் இஸட் பிரிவு பாதுகாப்பு விரைவில் விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 

bja torget stalin what next
Author
Chennai, First Published Aug 27, 2019, 6:59 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதைப்போல், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பும் ரத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.bja torget stalin what next

முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து. பிரதமர்களுக்கு, பாதுகாப்பு வழங்க சிறப்பு பாதுகாப்புப் படை என்ற பெயரில் ஒரு சிறப்பு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.  அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட முன்னாள் இந்நாள் பிரதமர்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடிய அரசியல் முக்கிய புள்ளிகள் என ஒட்டுமொத்தமாக இதுவரை  சுமார்  3 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பாஜகஇடையே  பல்வேறு வகைகளில்  கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டு அது தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. bja torget stalin what next

இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனதுகருத்துகளை மத்திய அரசுக்கு எதிராக காட்டமாக தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு வழங்கி வந்த  சிறப்பு பாதுகாப்பை  மத்தியஅரசு விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடரும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மன்மோகன்சிங் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கியுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கினார். அதன்படி 22 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் 24 மணிநேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். bja torget stalin what next

அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பயணிப்பது, அரசியல் பொதுகூட்டம், குடும்ப நிகழ்ச்சி என அனைத்திலும் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.  இந்த நிலையில் ஸ்டாலினின் உயிருக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் அச்சுருத்தல்களோ, மிரட்டல்களோ ஏதும் இல்லாதபோது அவருக்கு கமாண்டோ பாதுகாப்பு தேவையற்றது என தமிழகத்திலிருந்து  மத்திய அரசுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அவரின் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்படும் இஸட் பிரிவு பாதுகாப்பு விரைவில் விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.  ஆனால் இதுவரை அவரது பாதுகாப்பு தொடர்பாக எந்த தகவல்களும் இல்லை என்றும், தற்போது வெளியாகி வரும் வதந்திகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios