Asianet News TamilAsianet News Tamil

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு தடைவிதிக்க முடியாது.! பொது நல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!

பீகாரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை, சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததிருப்பது பீகார் மாநில அரசியல்கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
Bihar Assembly elections cannot be banned! Supreme Court dismisses public interest litigation
Author
Bihar, First Published Aug 28, 2020, 10:55 PM IST

பீகாரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை, சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததிருப்பது பீகார் மாநில அரசியல்கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் பரிசீலிக்கும் என்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்  தெரிவித்துள்ளதாம். நீதிபதிகள் ஆர்.எஸ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பிரிவு, சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கை எதுவும் வெளியிடப்படாத நேரத்தில், இந்த மனு அர்த்தமற்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Bihar Assembly elections cannot be banned! Supreme Court dismisses public interest litigation

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது  எனக் கூறி கொரோனா காரணமாக பீகார் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அசாதாரண சூழ்நிலைகளில் வாக்கெடுப்புகளை ஒத்திவைக்க, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் அனுமதி வழங்குகிறது என்ற அடிப்படையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி மனுதாரர் அவினாஷ் தாக்கூர், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இது தொடர்பாக உத்தரவு இட வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் தேர்தல் குழுவுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறியது.தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios