பிகில் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசிய நடிகர் விஜய்க்கு தற்போது ஆப்பு தயாராகிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது. அதை கேள்விப்பட்ட விஜய் பயங்கர அப்செட்டில் உள்ளாராம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வெளியான தலைவா படத்தில் "டைம் டு லீட்" என விளம்பரம் செய்து ஜெயலிதாவை விஜய் கடுப்பேற்ற ,  பின்னர் "டைம் டு பிளீட்"  என விஜய்க்கு செய்துகாட்டினார் ஜெயலலிதா. அதில் பெரும் சிக்கலை சந்தித்து அரசியலே வேண்டாம் சாமி என்று ஒதுங்கி இருந்த விஜய், தற்போது கருணாநிதி, ஜெயலலிதா, இல்லாததை பயன்படுத்தி அரசியலில் குதித்து விடலாம் என்று எண்ணினாரோ என்னவோ. பிகில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஆளும் அதிமுக அரசை வாய்க்கு வந்தபடி தாறுமாறாக விமர்சித்தார்.

 

விஜயின் அந்தப் அரசியல் பேச்சு அரசை உச்சக்கட்ட கோபத்திற்கு கொண்டு சென்றதுடன். அமைச்சர்களும் விஜயை ஷிப்ட் போட்டு வச்சி செய்ய துண்டைக்காணோம் துணியைகாணோம் என வெளிநாட்டிக்கே பறந்தார் விஜய்.  இந்த முறை விஜய்க்கு மன்னிப்பே கிடையாது, முதலமைச்சர்  முன்னிலையில் அவரை மண்டியிடவைக்க வேண்டும் என சபதமே எடுத்துள்ளனராம் அமைச்சர்கள். ஆம் அதற்காக அத்தனை வேலைகளும் படுஜோராக  ஆரம்பித்து விட்டதாக தகவல்  பரபரக்கிறது.

படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்களை வைத்து இப்போதே விஜய்க்கு எதிரான கேம் ஸ்டார்ட் ஆகி விட்டது  என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். அவர்களும் அரசை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று  விஜய் வச்சு செய்ய முடிவு செய்துள்ளனராம். தீபாவளிக்கு  பிகில் ரிலீஸ் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் படம் சென்சார் போர்டு பட்டியலுக்கே வரவில்லையாம்.  இதைக் கேள்விப்பட்டு  அதிர்ந்துபோயுள்ள விஜய்.  சூப்பர் ஸ்டார் நடிகரை நாட உதவிகேட்க ,அவரும் இந்த விவகாரத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டாராம்.  இதனால் செய்வதறியாது நொந்து நூடுல்ஸ் ஆகி உள்ள விஜய் தீபாவளிக்கு படம் வரவில்லை என்றால் அது தான் சினிமா கேரியருக்கே பாதிப்பை உண்டாக்கி விடும் என்பதற்காக,

மீண்டும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சரண்டர் ஆவதை தவிற வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். ஆடியோ ரிலீசில் எந்த அமைச்சர்களை விமர்சித்தாரோ அதே அமைசைசர்களிடமே  முதல்வரை சந்திக்க உதவிகேட்டு கதவை தட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆக மொத்தத்தில் எடப்பாடியார் முடிவு செய்தால் மட்டுமே தீபாவளிக்கு பிகில் ஊதும் இல்லையென்றால் காற்று மட்டும்தான் வரும் என்கின்றனர் அதிமுக கட்சிக்காரர்கள்