பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக குடும்பமாக போட்டிக்குள் நுழைந்தவர்கள் பாலாஜியும், நித்யாவும். இதில் நித்யா நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் பாலாஜி நூறாவது நாளுக்கு சில நாட்கள் முன்னர் வரை பிக் பாஸ் வீட்டில் வெற்றிகரமாக தங்கி இருந்தார். 

பாலாஜிக்கு பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவது நோக்கமாக இருக்கவில்ல. எப்படியாவது தன்னுடைய மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி மீண்டும் குடும்பமாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்தது.
கிட்டத்தட்ட தற்போது அவரின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. 

ஆரம்பம் முதலே அவர் மீது கோபத்தில் இருந்த நித்யா , பிக் பாஸ்  வீட்டிற்கு வந்த பிறகு பாலாஜிக்காக கொஞ்சம் கொஞ்சமாக மனம் இறங்கி இருக்கிறார். இதனால் இந்த வாரம் பாலாஜி எலிமினேட் ஆன போது கூட அவர் , பாலாஜியிடம் இன்னும் 100 நாட்கள் பிக் பாஸ் சோதனை வெளியில் காத்திருக்கிறது. 

அதில் வெற்றி பெற்றால் நாம் குடும்பமாக சேர்ந்து வாழலாம் என்று கூறி இருக்கிறார். இது இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாலாஜிக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அவரது பீப் வசங்களும் , கோபத்தில் வார்த்தைகளை விடுவதும் தான் அவர் தரப்பில் நெகடிவாக கருதப்பட்டது. மற்றபடி அவர் எலிமினே ஆனது பெரும்பாலான அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தையே அளித்திருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் கலைஞரின் மரணம் நிகழ்ந்தது. அப்போதே பாலாஜி மிகுந்த கலக்கத்துடன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடந்து வெளியில் வந்த பிறகு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.