அதிர்ச்சியடைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்..! 

பிக்பாஸ் நிகழ்ச்சி -2   பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை  நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்கள் கருணாநிதியின் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கலைஞர் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தகவல், உள்ளே போட்டியாளர்களுக்கு தெரியா நிலையில், நேற்று  திடீரென கலைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தியை  பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் தெரியப்படுத்தப் பட்டது.

போட்டி விதிகளின் படி, வெளியில் என்ன நடக்கிறது என்பதை போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது . ஆனால் மாபெரும் இழப்பான கலைஞர்  கருணாநிதியின் இழப்பு தெரிந்த எவரும் எப்படி அதிர்ச்சி அடையாமல் இருக்க  முடியாது.

போட்டியாளர்களில் பொன்னம்பலம், ஜனனி  ஐயர்,  தாடி பாலாஜி, மும்தாஜ் என அனைவரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.