பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), எம்எம்டிசி, ஒடிசாவில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை டெல்லியில் கூடி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது. மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு கூறுகையில், “6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

அதன்படி எம்எம்டிசி, தேசிய கனிவள மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி), பாரத மிகுமின் நிறுவனம் (பிஹெச்இஎல்), ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா முதலீட்டுக் கழகம், எம்இசிஓஎன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது.

அதேபோல ஒடிசா சுரங்கக் கழகத்திலிருந்து 20 சதவீதப் பங்குகளையும், ஒடிசா முதலீட்டுக் கழகத்தில் 12 சதவீதப் பங்குகளையும், என்எம்டிசி நிறுவனத்தில் இருந்து 10 சதவீதப் பங்குகளையும் அரசு விற்பனை செய்ய இருக்கிறது. 

பிஹெச்இஎல், எம்இசிஓஎன் நிறுவனத்தில்இருந்து தலா 0.68 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது / ஒடிசா தொழில்துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கழகம் (ஐபிஐசிஓஎல்) நிறுவனத்தில் இருந்து 12 சதவீதப் பங்குகளையும், ஒடிசா சுரங்கக் கழகத்தில் இருந்து 27 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.''
இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.