முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணப்குமார்முகர்ஜி, 13 ஆவதுஇந்தியக்குடியரசுத்தலைவராககடந்த 2012 முதல் 2017 வரைபதவிவகித்தவர். மேற்குவங்காளத்தைச்சேர்ந்தமூத்தகாங்கிரஸ் அரசியல்வாதியானபிரணப் முகர்ஜி, குடியரசுத்தலைவர்ஆகும்முன்னர்மன்மோகன்சிங்அரசில்நிதிஅமைச்சர்ஆகஇருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவி முடிந்த பிறகு பாஜகவுடன் நெருக்கம் காட்டியதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். மறைந்த சமூக சேவகர் நானா தேஷ்முக் மற்றும் கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
