Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது..!! முதலமைச்சருக்கு அமைச்சர் பரிந்துரை, அதிமுக அதிரடி மேல் அதிரடி..!!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் எனவே தான் தமிழக அரசு சார்பாக அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது, அவருக்கு பாராத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

Bharat Ratna award for SBP. Minister's recommendation to the Chief Minister, AIADMK action on top action.
Author
Chennai, First Published Sep 29, 2020, 1:35 PM IST

தமிழகத்தில் திரையரங்குகள் துவங்குவது குறித்து விரைவில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்கு துவங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.  ,மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். திரைப்படத்துறையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு ,சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கும் வெள்ளித்திரையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

Bharat Ratna award for SBP. Minister's recommendation to the Chief Minister, AIADMK action on top action.

திரையரங்கு துவங்குவது குறித்து தற்போது வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக எந்த ஒரு சரியான வழிகாட்டுதலும் வரவில்லை, சரியான வழிகாட்டுதல் வந்த பின்பு,தமிழகத்தில் மருத்துவ குழுவினர் வழங்கக்கூடிய அறிவுரைகளுக்கும் ஏற்ப தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். ஓடீடீ யின் வாயிலாக திரைப்படங்கள் வெளியிடுவதால் ஏற்பட்டு உள்ள பிரச்சினை குறித்து கேள்விக்கு, இதுகுறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. ஓடீடீ பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை, இதுகுறித்து தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்,

Bharat Ratna award for SBP. Minister's recommendation to the Chief Minister, AIADMK action on top action.

பேச்சு வார்த்தைக்கு அவர்கள் தாயார் என்றால் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று கூறினார். மேலும், எஸ்.பி.பி மறைவை பேரிழப்பாக நாடு முழுவதும் பார்க்கப்படுகிறது. அவரின் இழப்பு தமிழ் திரைத்துறையினருக்கு பேரிழப்பு.  எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் எனவே தான் தமிழக அரசு சார்பாக அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது, அவருக்கு பாராத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார் என்று கூறினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios