தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும் அதில் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் எனவும் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை  செய்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

பாரத் நெட் திட்டம் டெண்டரில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திமுக தொடர்ந்து முட்டுக்கடை போட்டு வந்தது.அதன் பிறகு மத்திய அரசிடமும் இந்த டெண்டர் குறித்து புகார் அளித்தது திமுக. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பாரத் நெட் டெண்டர் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக இந்த டெண்டரில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி டெண்டர் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் பாரத் நெட் டெண்டர் விடப்படும் என்று தெரிவித்திருந்தார் அமைச்சர் உதயக்குமார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயக்குமார்....."தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் அதிவேக இண்டா்நெட் வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட பாரத் நெட் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தவறான செய்தியாகும். அரசின் அனைத்துத் திட்டங்களிலும் உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. பாரத் நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளை பொருத்தவரை 100 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அறிவுறுத்தலாக உள்ளது. அதற்கேற்ப, உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாரத் நெட் ஒப்பந்தப் புள்ளிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் ஒப்பந்தபுள்ளி கோரப்படும்.தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டோரை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1.38 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.திரு.வி.க. மண்டலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 6,009 பேரில் 4,222 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.