அழகிரி 6ஆம் நாள் வரைக்கும் எங்கே காத்திருந்தாரு? எப்போ கட்டுணாநிதியை காவேரி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோமோ அப்போதே பிரச்னையை ஆரம்பிச்சராம்.

திமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என பெரும் எதிர்பார்ப்பு ஒன்று மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கிறது. கலைஞரின் மறைவிற்கு முன்னரே ஸ்டாலின் செயல் தலைவராக இருந்து கட்சியின் முழு பொறுப்பையும் கவனித்து வந்தார் என்பதால் அவர் தான் அடுத்தது தலைவராக வரப்போகிறார் என்பது அப்போதே கட்சியில் அனைவரும் அறிந்திருந்தனர். கலைஞரின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே இந்த செய்தி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் இடையே இருந்து வந்தது. 

செயற்குழு கூட்டத்தில் மக்களின் எதிர்பார்த்தது போல ஸ்டாலின் தான் தலைவர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை மற்றபடி அவர்தான் தலைவர் என்பதை ஏறக்குறைய உறுதி செய்திருக்கின்றனர். இதனிடையே அழகிரி வேறு திமுகவின் விசுவாசிகள் என்பக்கம் , திமுக விரைவில் உடையும் என்றெல்லாம் கிளப்பிவிட்டிருக்கிறார்.

அழகிரியின் ஏன் இப்படி திடீரென தலைதூக்குகிறார் எனும் கேள்வி இதனால் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அழகிரி ஆரம்பித்திருக்கும் இந்த பிரச்சனைகள் காவேரி மருத்துவமனையில் கலைஞர் இருக்கும் போதே புகைய துவங்கி இருக்கிறது. கலைஞரை காண காவேரி மருத்துவமனைக்கு வந்தவர்கள் எல்லோரும் ஸ்டாலினிடம் தான் சென்று பேசி இருக்கின்றனர். இதனால் ஏற்கனவே கடுப்பாகி இருக்கிறார் அழகிரி.

இதனால் அழகிரியின் மனதை அறிந்த முரசொலி செல்வம் கலைஞரை காண வருபவர்களை எல்லாம் அழகிரியையும் சென்று காணும்படி கூறி இருக்கிறார். அவர் பேச்சை கேட்டு கலைஞரை காண வந்திருந்த திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் அழகிரியை காண சென்றிருக்கின்றனர். அவர்களிடம்மும் தன் கோபத்தை காட்டி இருக்கிறார் அழகிரி.

நீங்கலாம் வர சொன்னா தான் வந்து பார்ப்பீங்களா? தானா வந்து பாக்க மாட்டீங்க அப்படி தானே? என் கைக்கும் ஒரு நாள் அதிகாரம் வர தான் போகுது. அதையும் நியாபகம் வெச்சுகோங்க,

நீங்க யாருக்கு இப்போ முக்கியத்துவம் குடுக்குறீங்களோ அவரால கட்சிக்கு வேணா தலைவர் ஆக முடியும். ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது. யார் கூட அவர் கூட்டணி வைத்து என்ன முயற்சி பண்ணினாலும் எம்பி தேர்தலில் கண்டிப்பா ஜெயிக்க முடியாது. சட்டமன்ற தேர்தலிலும் அதே கதிதான். என்று கூறி இருக்கிறார். இவ்வாறு தனக்கான நேரம் வரப்போகிறது என்பதையும் இதனிடையே உணர்த்தி இருக்கிறார் அழகிரி.

அழகிரியின் இந்த செயல்களை எல்லாம் அறிந்தும் கூட சூழ்நிலை அறிந்து கலைஞருக்காக அமைதி காத்திருக்கிறார் ஸ்டாலின்.