Asianet News TamilAsianet News Tamil

தினகரனை நெருங்கும் பாஜக...!? அதிமுகவுக்கு ஆப்படிக்க ஆதரவளித்த  சு. சாமி... impotent வார்த்தையை விட்ட ஆடிட்டர்...

Behind reason Gurumurthy and subramaniyan swamy support ttv dinakaran
Behind reason Gurumurthy and subramaniyan swamy support ttv dinakaran
Author
First Published Dec 27, 2017, 9:08 PM IST


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் பார்வையில் பயங்கர மாற்றம் ஏற்பட்டிருப்பதைத்தான் சுப்பிரமணிய சுவாமியால் 'மைலாப்பூர் லாபி' என அழைக்கப்பட்டவருமான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வார்த்தைகள் அதிமுகவில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தைப்போர் வெட்ட வெளிச்சமாக்குகின்றன,  ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே மத்திய உளவுத்துறை மூலம் பிரதமர் மோடிக்கு ஆர்.கே.நகரின் தொகுதியின் நிலைமை தெளிவாக உணர்த்தப்பட்டது.

ஏற்கனவே தினகரன் குடும்பத்தை படாத படுத்தி, ஆட்சி கட்டிலில் அமரும் நேரத்தில் ஆளுனரை உசுப்பிவிட்டு பரப்பன அக்ரஹாரா போனதும் பழனியையும் பன்னீரையும் ஒன்று சேர்த்து ஆடிய ஆட்டம், அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய  சர்ஜிக்கள் ரெய்டு அட்டாக் மன்னார்குடி குடும்பத்தின் மீது நடத்திய பின் தினகரன் தன்னுடைய தனி பலத்தைக்கொண்டு இடைத்தேர்தலில், ஒட்டுமொத்த கட்சியையும் மண்ணைகவ்வ விட்டுள்ளார்.

தினகரனின் இந்த விஸ்வரூப வெற்றியை அடுத்து, டெல்லியின் ரூட்டும் மாறத் தொடங்கியிருக்கிறது. உடனடியாக ஆட்சி அகன்றால் அது திமுகவுக்குச் சாதகம் ஆகலாம் என்ற நிலையில் தினகரனையும், எடப்பாடி - பன்னீர் தரப்பையும் ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை டெல்லி தொடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே, பலமுறை சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக தினகரனுக்கு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துவருகிறார். இந்த நிலையில் இப்போது ஆடிட்டர் குருமூர்த்தியும் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துகளைப் பதிவிட்டு அமைச்சர்களை கிழித்துவிட்டார்.

இதனால் சசிகலா குடும்பத்தின் மேல் டெல்லி இதுவரை காட்டிவந்த கடுமை குறையுமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. “ஆர்.கே.நகர் தேர்தல் முடிவால் தனது ஆளுநர் ஆட்சி பற்றிய முடிவை டெல்லி மேலிடம் மீண்டும் யோசிக்கிறது. அதேநேரம் தினகரன் மீதான அணுகுமுறையில் இப்போதைக்குப் பெருத்த மாற்றம் இருக்காது’ என்கிறார்கள். அதேநேரம் இனி இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியை வைத்து தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் நடத்த முடியாது, யாரையும் வீழ்த்த வழியில்லை என டெல்லி நினைத்துள்ளது. எனவேதான், அதிமுகவில் மீண்டும் ஒரு கேம் நடத்தும் படலம் தொடங்கியுள்ளது. இந்த ட்விஸ்ட்டின் முதல்படிதான் ஆடிட்டரின் ட்விட்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios