Asianet News TamilAsianet News Tamil

ரூ.50 கோடி நிலத்தை ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்சரின் பினாமி... வசமாக சிக்கும் பாஸ்கரன்..!

சிவகங்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஸ்கரன் மீதும் நடவடிக்கை பாயலாம் எனக் கூறப்படுகிறது. 

Baskaran the deputy minister of the former minister who put Rs.50 crores
Author
Tamil Nadu, First Published Jun 19, 2021, 11:07 AM IST

சிவகங்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஸ்கரன் மீதும் நடவடிக்கை பாயலாம் எனக் கூறப்படுகிறது. 

சிவகங்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் - பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி.Baskaran the deputy minister of the former minister who put Rs.50 crores

இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படும் பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர். கோயில் நிலத்தை அபகரித்தவர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி என கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருக்குமானால் அவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios